'அரசியலில் எனது அணுகுமுறை தனித்துவமாக இருக்கும்' - அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்ததே தமிழகத்தில் போதைப் பொருள், கொலை கொள்ளை அதிகரித்து விட்டதாக சாடியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு அகற்றப்பட்டால்தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, விளம்பர திமுக ஆட்சியில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப் பொருள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக குற்றம் சாட்டினார். திமுக-வின் கண் அசைவு இல்லாமல் போதைப் பொருள் இந்த அளவுக்கு புழக்கத்திற்கு வர வாய்ப்பே இல்லை என்று கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழத்தில் 14 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையத்திற்கு SIR  நடவடிக்கை மேற்கொள்ள உரிமை உள்ளது என தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா, போலி வாக்காளர்களை சேர்க்க முடியாது என்பதால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார். 

Night
Day