மும்பையிடம் போராடி வீழ்ந்தது பஞ்சாப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 33 ஆவது போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் சூர்ய குமார் யாதவ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். அந்த வகையில் முதல் இன்னிங்ஸ் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய பஞ்சாப் அணியில் அஷ்டோஷ் ஷர்மா மட்டும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்களெல்லாம் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 9  விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி போராடி வீழ்ந்தது. 

varient
Night
Day