விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடி சதமடித்த ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 37.4 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் த...