புல் தரையில் உருண்டு விளையாடிய புலி - கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலையோர புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால், கோடைகாலத்தில் வறண்டு காணப்பட்ட முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் மான் கூட்டங்கள், மயில்கள், காட்டு யானைகள் உள்ளிட்டவை சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை புலி ஒன்று நீண்ட நேரம் சாலையோர புல் தரையில் உருண்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை சபாரி வாகனங்களில் சென்று சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Night
Day