பீகார் தேர்தல் வெற்றி : பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுகலகத்தில் பீகார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி முகம் கண்டு ஆட்சியை தக்க வைத்துள்ளது. பீகார் தேர்தல் வெற்றியை நாடு முழுவதும் பாஜக-வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திலும் பீகார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியது. பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனார். பிரதமர் மோடியும் கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

varient
Night
Day