பாரீஸ் ஒலிம்பிக் - 2 பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் துப்பாக்கி துப்பாக்கிச்சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். இதன்மூலம், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மனுபாக்கர் படைத்தார்.

இந்நிலையில், இரு பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கும், கலப்பு இரட்டையர் துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங்கிற்கும் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

varient
Night
Day