சென்னை கார் பந்தயத்தால் சாலைகள் சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்ற இடத்தில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

 ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த 31ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த பந்தயம் நடைபெற்ற இடத்தில் ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை குப்பைகளும் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர்களும் ஆங்காங்கே கழற்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day