கேண்டிடேட்ஸ் செஸ் : சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளதோடு, இந்த இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருப்பது மிகவும் பெருமையளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் குகேஷ் தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் என்றும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்க்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Night
Day