இனி போராட சக்தியில்லை - ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்!

எழுத்தின் அளவு: அ+ அ-

மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த வினேஷ் போகத் ஓய்வறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாமல் மனம் உடைந்த அவர், மல்யுத்தம் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். ஒலிம்பிக் என்பது விளையாட்டு வீரர்களுக்கு கனவாக உள்ள நிலையில், வினேஷ் போகத் இந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும், ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்று மீண்டும் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

varient
Night
Day