மூளை திரவத்தை உறிஞ்சும் வெயில் தப்பிக்க என்ன செய்யலாம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் தற்போதே வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வாட்டி வதைக்கிறது.

மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே வெயில் சதம் அடித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என மக்கள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக வெயில் காலத்தை பொறுத்தவரை அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே, கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக இளநீர், தர்பூசணியின் வரத்து அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கிய தர்பூசணி சீசன் காரணமாக சந்தைகளில் தற்போது தர்பூசணிகள் குவிந்து வருகின்றன. 60 நாட்களை மட்டுமே ஆயூட்காலமாக கொண்ட தர்பூசிணி, ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மரக்காணம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசிணி பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் ஆகியவற்றை எடுத்து கொள்வதுடன், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

வெயில் காலங்களில் உடலுக்கு அதிகளவு நீர் சத்து தேவைப்படுவதால், தர்பூசணி, இளநீர், கிர்ணி போன்றவை சாப்பிடுவதன் மூலம் உடலில் நீர்சத்து அதிகரிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உப்பு அதிகமுள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும் என்பதால், உப்பு அதிகமுள்ள உணவு பொருட்களை தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் தண்ணீர் அதிகம் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாட்டி வதைக்கும் இந்த கோடை வெயிலில், ஆரோக்கியமான உணவு பொருட்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல், நீர் சத்து நிறைந்த பழங்களையும், தண்ணீரையும் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் அஜித் உடன் செய்தியாளர் முத்துகுமார்...

Night
Day