கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை - நோயாளிகள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கழிவு நீருடன் குப்பைகளும் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் மக்கள், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் முறையான பராமரிப்பு இன்றி செயல்படுவதால், ஏழை, எளிய மக்கள் உணவு கிடைக்காமல் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, விளம்பர திமுக அரசு அலட்சியம் காட்டாமல் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day