உடற்பயிற்சியின்மை இதய நோய் பிரச்னைகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் போதுமான உடற்பயிற்சி மேற்கொள்வதில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்திய வயது வந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோரின் உடல் செயல்பாட்டு அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த உடற்பயிற்சியின்மை இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Night
Day