OPERATION SINDOOR வெற்றி - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தியுள்ள "ஆபரேஷன் சிந்தூர்" மூலம் நம் இந்திய மண்ணின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் எதிரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கிட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்திட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு துணை நிற்போம் என புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள "ஆபரேஷன் சிந்தூர்" மூலம் நம் இந்திய மண்ணின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகைய துணிச்சலான நடவடிக்கையின் மூலம் இந்திய மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்துள்ள மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும், இந்திய ராணுவத்திற்கும் நம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் வீர வணக்கம் செலுத்தி வாழ்த்துகிறோம் என புரட்சித்தாய் சின்னம்மா புகழ்ந்துரைத்துள்ளார்.

மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

இந்திய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் எதிரிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிட மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்திட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு துணை நிற்போம் என இந்நேரத்தில் உறுதி அளிப்போம் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day