4 மாணவிகளை கடித்து குதறிய நாய்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மீனாட்சி அரசு கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிந்த நாய்கள் நான்கு மாணவிகளை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கல்லூரி வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதாக ஏற்கனவே கல்லூரி நிர்வாகம் சார்பில் மதுரை மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் 4 மாணவிகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, கல்லூரிக்கு வாகனம் கொண்டு வரப்பட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய்களை மாநகராட்சியினர் பிடித்து சென்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதும், அதனை கட்டுப்படுத்தாமல் நகராட்சி, மாநகராட்சியினர் மெத்தனம் காட்டி வருவதும் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

Night
Day