எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பயிற்சி மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த சகமாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரியின் முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழு அமைத்து குற்றம்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட பயிற்சி மருத்துவ மாணவர் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், மேல் நடவடிக்கைக்கு மருத்துவ கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.