பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் - ஒருவர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேச தலைநகர் டாக்காவில் பள்ளி வளாகத்தின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாக்காவின், உத்தரா பகுதியில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கமாக விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென பள்ளி வளாகத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. உடனே பள்ளியிலிருந்த மாணவர்கள் வேக, வேகமாக வெளியேற்றப்பட்டனர். 

இருப்பினும் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

Night
Day