எழுத்தின் அளவு: அ+ அ- அ
டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், தனது 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் திருநாமத்தை தாங்கி நிற்கும் நாளிதழான "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்", இன்று தனது 37-ஆம் ஆண்டை நிறைவு செய்து, 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்றும் இந்த நன்னாளில் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
நம் புரட்சித்தலைவி அம்மா நிறுவனராக இருந்து, தமது திருக்கரங்களால் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நாளிதழான "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்", சமுதாய சீர்கேடுகளையும், தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் மக்களின் பார்வைக்கு துணிச்சலோடு எடுத்து செல்கின்ற உன்னத பணிகளை திறம்பட செய்து வருவதாகவும்,
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் கருத்துக்களையும், எண்ணங்களையும் தமிழகத்தில் கடைக்கோடியில் இருக்கின்ற பாமரர்களுக்கும் கொண்டு சேர்க்கிறது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
ஆளும் வர்க்கத்திற்கு அடிபணியாமல், எதற்கும் அஞ்சாமல், துணிச்சலோடு தொடர்ந்து தனது பணியை சிறப்புடன் ஆற்றி வரும் "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையில் தனது பொன்னான முத்திரையை தொடர்ந்து பதித்து வருவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழராம் சூட்டியுள்ளார்.
அரசியல் செய்திகளோடு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உலக நிகழ்வுகள், பொதுஅறிவுத் தகவல்கள், கலை, இலக்கியம், மருத்துவம் மற்றும் ஆன்மிக செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், கவிதைகள், கருத்து படங்கள் போன்றவற்றை, அனைவரும் விரும்பும் வகையில், தொடர்ந்து "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ் வெளியிட்டு வருவதை வரவேற்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்" நாளிதழின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்ற பத்திரிகையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும், இந்நன்னாளில் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.