‌ஸ்வதந்திரா ஃபவுண்டேஷன் சார்பில் மூன்றாவது டிபென்ஸ் & டெக்னாலஜி கண்காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‌ஸ்வதந்திரா ஃபவுண்டேஷன் சார்பில் மூன்றாவது டிபென்ஸ் & டெக்னாலஜி கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியை லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது உற்பத்தி திறன்களை வெளிப்படுத்த உள்ளன. 400-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பாதுகாப்பு உற்பத்தித் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் பல்வேறு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

Night
Day