மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு பணிகளால் விவசாயிகள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே மேலும் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்தப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தசில  தினங்களுக்கு முன் மாதவனூர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, ஆய்வு பணிக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் அகற்றப்பட்டன. இதனிடையே திருப்புல்லாணி மற்றும் ஆணைகுடி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

Night
Day