ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு கைது வாரண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

26 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமீன் வெளிவர முடியாத கைது வரண்ட்டை பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் பெற்று மோசடி செய்தததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.ஜீ குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளில் சுமார் 26 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமசாமி தரப்பில் வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் காசோலை மோசடி சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. தேனாண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகாததால், என்.ராமசாமிக்கு எதிராக ஏற்கனவே பிறப்பித்த ஜாமினில் வெளிவர கூடிய கைது உத்தரவை மாற்றி, ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிப்பதாக உத்தரவிடப்பட்டது.என்.ராமசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணை அக்டோபர் 3 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Night
Day