ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் அருகே சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை தேவசேனாதிபதி சிற்பக்கூடத்தை சேர்ந்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கு 27 அடி உயரம், 21 அடி அகலம், 21 டன் எடை கொண்ட அஷ்டதாகு லோக நடராஜர் சிலை வடிவமைத்து சுவாமிமலை தேவ சேனாதிபதி சிற்ப கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது. அதற்காக ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day