வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்‍கு, வ.உ.சி. மணிமண்டப பொறுப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


வ.உ.சி. வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திரளான பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

வ.உ.சி. திருவுருவப் படத்தை, மணிமண்டப பொறுப்பாளர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு நினைவுப் பரிசாக வழங்கினார்கள்.

வ.உ.சி. மணிமண்டபத்தில் திரண்டிருந்த மக்களுடன் சேர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்கள் அனைவரோடும் உரையாடி மகிழ்ந்தார். 

வ.உ.சி. மணிமண்டப குறிப்பேட்டில் புரட்சித்தாய் சின்னம்மா கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து சின்னம்மாவுடன் மக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.



 

varient
Night
Day