வைகோ பூரணமாக குணமடைய சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ, கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். தற்போது திரு.வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன -

தமிழ் மண்ணின் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவராக விளங்கும் திரு. வைகோ தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து போராடி வருபவர் - திராவிட சித்தாந்தங்களை இம்மியளவும் விட்டு விலகிடாமல் வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் - தங்களுடன் திரு.வைகோ மேற்கொண்ட அரசியல் பயணம் மிகவும் புனிதமானது - அதனை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமிதம் அடைவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.  

அன்புச் சகோதரர் திரு. வைகோ விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் -அதே உத்வேகத்துடன் மீண்டும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day