வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சலப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கி சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

கடந்த 4-ம் தேதி நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் தஞ்ஜின் உயிரிழந்தார். வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் தேடும் பணி நடைபெற்று வந்தது. இதனிடையே வெற்றி துரைசாமியின் உடல், 8 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

varient
Night
Day