விவசாயிகள் போராட்டம் - ஹைட்ரோ கார்பன் இயந்திரம் அகற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூர் அருகே விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிரொலியாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் விவசயிகள் நிம்மதியடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நடைபெற தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து இந்த 20 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நடக்காது என தமிழக அரசு மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்குறுதி அளித்திருந்தனர்.

இதனிடையே வாக்குறுதியை மீறி அலுமனந்தல் பகுதியில் கண்மாய் கரையில் மூன்று ராட்சத இயந்திரங்கள் மூலம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் பணி நடைபெற்றது. இதனையறிந்த விவசாயிகள் அப்பகுதியில், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அங்கிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட துளையிடும் இயந்திரங்கள் அகற்றப்பட்டன. இதனால், விவசாயிகள் நிம்மதியடைந்தனர். 

Night
Day