எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் வடமாநில இளைஞர் மரணத்திற்கு இழப்பீடு கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடமாநில இளைஞர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் உள்ள மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது இறப்புக்கு நீதி கேட்டும் இழப்பீடு கேட்டும் 200க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வடமாநில இளைஞர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். இதில் கல்வீசி தாக்கியதில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலாஜி மண்டை உடைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.