சென்னையில் 10 இடங்களில் ED சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக  சென்னையில் தி.நகர், கே.கே.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பைனான்ஸ் மற்றும் ஆடிட்டர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கம் பகுதியில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும் பல வருடங்களாக மும்பையில் நிறுவனம் நடத்தி வந்த நிறுவனத்தை  தற்போது தமிழகத்திற்கு மாற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day