எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து 24 கேரட் தங்க கட்டிகளை சுங்க தீர்வை இல்லாமல் இறக்குமதி செய்து மோசடி செய்ததாக 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில், கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தங்க இறக்குமதியில் மோசடி நடந்ததை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இருந்து 24 கேரட் தங்க கட்டிகளை சுங்க தீர்வை இல்லாமல் இறக்குமதி செய்து அதனை தங்க நகைகளாக விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில், இந்த மோசடிகள் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதாகவும், இதில் ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. அதோடு இதில் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவுகளில், பணியாற்றும் சுங்கத்துறை உயர் அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது