விருதுநகர்: தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரால் போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்க விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஏராளமான திமுகவினர் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதிக்கு வருகை தந்த தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி எம். குமாருக்கு திமுக கட்சி தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திமுகவினர் தங்களது கார் மற்றும் பைக்குளை ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

Night
Day