மக்களவை தேர்தலுக்கும் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகள் : புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவினர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மக்‍களுக்‍கு அளித்த வாக்‍குறுதிகள் எதையும் நிறைவேற்றிடாத நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்‍கும் மக்‍களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்‍குறுதிகளை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திமுகவினர், தமிழக மக்‍களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற தப்புக்‍ கணக்‍கு போடுவதாகவும், அவர்களின் பகல் வேஷம் இனியும் தமிழக மக்‍களிடம் எடுபடாது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைவது உறுதி என்றும் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், திமுகவினர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றிடாத நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். திமுகவினர் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர் - அவர்களின் பகல்வேஷம் இனியும் தமிழக மக்களிடம் எடுபடாது - வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைவது உறுதி என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினர் ஒரே பொய்யை எத்தனை முறை சொல்வது என்ற கணக்கு கூட தெரியாமல், நீட் தேர்வு  தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என்று மீண்டும் அறிவித்திருப்பதன் மூலம் திமுகவினரின் பகல் வேஷம் கலைந்துவிட்டது - 

மேலும், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் மூடப்படும் என்று, நடைமுறையில் சாத்தியப்படாததை எல்லாம் சொல்லியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது - சுங்கச் சாவடிகளை மூடிவிட்டால் தேசிய நெடுஞ்சாலைகளை யார் பராமரிப்பது? என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். 

விவசாயிகளின் நலன் மற்றும் மக்களின் நலன் என்று திட்டங்களை பட்டியலிடும் திமுகவினர், அவர்களுக்கு எதையும் செய்வதில்லை - திமுகவினரின் இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழக மக்களை கசக்கிப் பிழிந்ததுதான் மிச்சம் என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்..
 
மேலும், சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை தூக்கிப் பிடித்து அதற்கு 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் ஒதுக்கியும் அந்த திட்டம் கடலில் கரைந்த பெருங்காயம் போல ஆனது - இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் இது செயல்முறை படுத்தப்பட்டு, மக்களின் பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது - அதன்பிறகு கைவிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்போவதாக திமுகவினர் தற்போது தங்களது தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என, புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

எனவே, திமுகவினரும் அவர்களது கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் - இனி அவர்களிடம் உங்களின் போலியான பேச்சுக்கள் எடுபடாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுகவினர் அங்கம் வகிக்கும்  கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளரே யார் என்று தெரியாதபோது, தேர்தல் அறிக்கையில் ஏராளமான திட்டங்களை செயல் படுத்தப்போவதாக கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது - திமுகவினரின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எல்லாம் அடுத்து வரப்போகும் இந்திய பிரதமர் நிறைவேற்றுவாரா என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இந்த கூத்துக்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர் - தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்ற 38 நாடாளுமன்ற உறுப்பினர்களால், தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம் - திமுகவினர் ஒவ்வொரு நாளும் மத்திய அரசோடு சண்டையிட்டுக்‍ கொண்டு, தமிழக மக்களை வஞ்சித்ததுதான் மிச்சம் - தற்போது நடப்பதையொல்லாம் பார்க்கும்போது "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day