தமிழகம்
சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த 10 பேர் கைது..!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லட்சுமியாபுரம் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் என்பவரின் மகன் ஸ்ரீலயம் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாரிச்சாமி என்ற ஆசிரியர் திட்டியதால் மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி, மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆசிரியர் மாரிச்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...