விருதுநகர் பட்டாசு விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்ட போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனுமதி இன்றி  பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட உராய்வின் போது பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த வெடி விபத்தில் பணியில் இருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பட்டாசு விபத்தால் ஏற்பட்ட புகையை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சடட்டவிரோத பட்டாசு தயாரித்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day