விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்து : புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தது குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற விபத்துகள், வரும் காலங்களில் ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 10 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தங்களது உயிரையே பணயம் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில்களில் ஈடுபடும் ஏழை, எளிய, சாமானிய மக்கள் இதுபோன்ற விபத்துக்களில் தங்கள் இன்னுயிரை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது - திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் பாட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், குடோன்களிலும்  தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திமுக தலைமையிலான அரசு, பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - திமுக தலைமையிலான ஆட்சி, பொறுப்பேற்றது முதல் இந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் பட்டாசு ஆலைகளில் 35க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன - எனவே, திமுக தலைமையிலான ஆட்சியில், பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் வரும் காலங்களில் ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசை கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day