வள்ளலார் பெருமானின் போதனைகளால் ராஜ் பவன் புனிதமாகிவிட்டது - ஆளுநர் ஆர்.என்.ரவி

எழுத்தின் அளவு: அ+ அ-

50 சதவீத உயர்கல்வி படித்த தமிழ்நாட்டில் பட்டியலின சமூகத்தினரை மோசமாக நடத்துவது மனதுக்கு வருத்தம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

வள்ளலாரின் 202வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இரண்டு நாட்கள் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வள்ளலாரின் திருவருட்பா புத்தகத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட்ட பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வள்ளலார் பெருமானின் போதனைகளால் ராஜ்பவன் புனிதமாகி விட்டதாக கூறினார். கடந்த 2002ம் ஆண்டு வல்லளாரை பற்றி தெரிந்து தான் கொண்டதாகவும், பிரிவினைவாதம், வறுமை ஆகியவற்றை போக்கும் வழிகள் வள்ளலாரின் தத்துவத்திற்கு உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 50 சதவீத உயர்கல்வி படித்த தமிழ்நாட்டில் பட்டியலின சமூகத்தினரை மோசமாக நடத்துவது மனதுக்கு வருத்தமாக உள்ளதாகவும், இந்தியாவில் பல இடங்களில் பட்டியலின சமூகத்தினருக்கு ஏற்ற தாழ்வு என்கிற நிலை இருந்தாலும், அதிகம் படித்தவர்கள் இருக்கும் தமிழகத்திலும் இதே நிலை நீடிப்பது துரதிஷ்டவ்சமானது எனவும் கூறியுள்ளார். 

Night
Day