வரும் 4ம் தேதி சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்க உள்ளது. 

இதனால், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

நாளை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வரும் 4ம் தேதி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 5ம் தேதி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கலில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வரும் 6ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day