சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே தூக்க கலக்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ் தனது மனைவி கவிதா மற்றும் அவர்களது 2 மகன்கள் கணேஷ், சக்தி குமார், மற்றும் சுரேஷின் சகோதரர் ஞானபிரகாசம் ஆகியோர் திருச்சியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இறையூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day