இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே புல்லா வெளி கடற்பகுதியில் இலங்கைக்கு கடத்தவிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 500 கிலோ பீடி இலை பண்டல்கள் புல்லாவெளி கடற்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கியூ பிரிவு போலீசார் பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து இரு  ஓட்டுநர்களை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

varient
Night
Day