வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் மீனம்பநல்லூர் கிராமத்தில் வேளாண்துறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு கடந்த வருடம் 179 கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட 
நிவாரணத் தொகையில் நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாது என வேளாண்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் மீனம்பநல்லூர் கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் வயலில் இறங்கிய விவசாயிகள் கருப்புக் கொடிகளை காட்டி போராட்டத்தில்  ஈடுபட்டனர். நிவாரண தொகையை விடுவிக்கவில்லையென்றால் சென்னை வேளாண்மைத் துறை அலுவலகம் முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். 

Night
Day