எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஒடிசா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 22 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் படிக்க சீட் வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் ஒடிசாவில் பிரியதர்ஷினி குமார், அரவிந்த் குமார், சுனில் சமந்த்ராய், ருத்ர நாராயண் பெகேரோ ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்ற குற்றச்சாட்டில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் பல்வான், முகேஷ் மீனா மற்றும் ஹர்தாஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று முன் தினம் நீட் தேர்வு மாணவ, மாணவியரின் பெற்றோரை சந்தித்த சிலர் 40 லட்ச ரூபாய் கொடுத்தால் நீட் தேர்வு வினாத்தாளை தருவதாக ஆசை வார்த்தை கூறிய கும்பலைச்சேர்ந்த விக்ரம் குமார், தரம்பால் சிங், அங்கித் குமார் ஆகிய 3 பேரை உ.பி சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.