ரேஷன் பொருட்கள் - புரட்சித்தாய் சின்னம்மாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து நடவடிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது இல்லை என்றும், இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், ரேஷன் பொருட்களை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது இல்லை என்று பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பரவலாக புகார் தெரிவித்து வருகிறார்கள். அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக அரசின் இத்தகைய சீர்கேட்டை தொடர்ந்து சுட்டிக்காட்டி, உணவுப் பொருட்களை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

varient
Night
Day