தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்?...
சோழவரம் அருகே இரு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி டிஜிபி-க்கு பரிந்துரைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த பார்த்திபன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், சண்டே சதீஷ், முத்து சரவணன் ஆகியோரை, பூந்தமல்லி காவல் நிலைய துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் எண்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி டிஜிபி-க்கு பரிந்துரைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஜனகராஜ குப்பம் கிராமத்தில் நடைபெற்?...