மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்தாய் வாழ்த்து பாடல் விஷயத்தை திமுக அரசு அரசியலாக்குவதாக தெரிவித்தார். தமிழை ஐநா சபை வரை கொண்டு சென்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு என்று தெரிவித்த எல்.முருகன், ஆளுநர் நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடித்தேடி பெரிதுப்படுத்துகின்றனர் என்றும் கூறினார். டிடி தொலைக்காட்சியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். 

Night
Day