மேம்பாலங்களை ஆக்கிரமித்துள்ள மரங்கள் அலட்சியத்தில் மாநகராட்சி நிர்வாகம் 09-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சியில் உள்ள மேம்பாலங்கள், தரை பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் பராமரிப்பின்றி, செடி கொடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. ஒருவேளை இயற்கை வளங்களை பாதுகாக்க மாநகராட்சி புதிய யுக்தியை கையாள்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலங்களில் வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளின் கட்சிகள்தான் இவை...

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், 147 தரைப்பாலங்கள், மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன. 

அவற்றில் வட சென்னையில் 29 பாலங்களும், மத்திய சென்னையில் 104 மேம்பாலங்களும், தென் சென்னையில் 14 மேம்பாலங்களும் பயன்பாட்டில் உள்ளன. 

சென்னை மாநகராட்சி உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் பராமரிக்க தனி பொறியாளர்கள் தலைமையில் குழு செயல்படுகிறது. 

மேம்பாலங்களை ஆய்வு செய்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்.

முறையான பராமரிப்பு இல்லாததால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களின் ஆயுட் காலம் முடிந்துவிட்டதாக தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

விளம்பர திமுக அரசால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், மேம்பாலங்களை செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளதை நம்மால் காண முடிகிறது.

சென்னையில் உள்ள மேம்பாலங்களில் பெரும்பாலான பாலங்களில் விரிசல் உள்ளதாகவும்,  மேம்பாலங்களின் உறுதி தன்மையை ஆராய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

வளர்ந்த நாடுகளில் மேம்பாலங்களின் தாங்குதிறன் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்வதாகவும், ஆனால்  சென்னையில் அவ்வாறு ஆய்வு செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னை சேத்துப்பட்டு ரயில்வே மேம்பாலம், ஹரிங்டன் ரோடு மேம்பாலம், சென்னை ரிசர்வ் பேங்க் அருகில் உள்ள மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் அதிக அளவு மரங்கள் மண்டி கிடப்பதால், அவை மேம்பாலங்களா ? அல்லது பூங்காவா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரச மரம், ஆலமரம் போன்ற மரங்களின் வேர்கள் படர்ந்தால், பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி விடும். மேம்பாலங்களில் உள்ள மரங்களை மாநகராட்சி கண்டு கொள்வதில்லை என்றும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை உரிய முறையில் பராமரிப்பது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலங்களில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி எடுத்து, இனி வரும் காலங்களில் மேம்பாலங்களில் மரம், செடி, கொடி என எதுவும் வளராமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day