வெகு விமர்சியாக நடந்த இலவச திருமணம் - மகிழ்ச்சியில் திளைத்த தமிழக மணமக்கள் 09-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் சுத்தூரு மடத்தில் தமிழகத்தை சேர்ந்த 24 ஜோடி மணமக்கள் உள்பட 118 ஜோடிகளுக்கு வெகுவிமரிசையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது... ஆதிஜெகத்குரு சிவராத்திரிஸ்வரா திருக்கோவில் ஆண்டு விழாவில் நடந்த திருமண வைபவம் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

கர்நாடக மாநிலம் நஞ்சன்கோடு அருகே கபிலா நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ சுத்தூரு மடம்.... இதன் தலைமை மடாதிபதியாக ஜெகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாசுவாமிகள் இருந்து வருகிறார்...

சுத்தூரில் அமைந்துள்ள ஆதிஜெகத்குரு சிவராத்திரிஸ்வரா திருக்கோவிலில் ஆண்டு தோறும் கோலாகலமாக உற்சவம் நடைபெறுவது வழக்கம்...

அந்த வகையில், நடப்பு ஆண்டும் ஆண்டு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக இளம் ஜோடிகளுக்கு இலவச திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

சுத்தூரு ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி  தேசிகேந்திர மகாசுவாமிகள் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் தாலி, சேலை,ரவிக்கை, வேட்டி, சட்டை உள்ளிட்ட பொருட்கள் மணமக்களுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டது....

தமிழகத்தின் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளை சேர்ந்த 24 மணமக்கள் உள்பட 118 ஜோடிகளுக்கு, ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி  தேசிகேந்திர மகாசுவாமிகள் மங்கள நாணை எடுத்துக்கொடுத்து ஆசி வழங்கினார்...

ஏழை எளிய மக்களை தேர்வு செய்து அவர்களுக்கு திருமணம் நடத்தி சீர்வரிசை வழங்கிய ஸ்ரீசுத்தூர் மடம், அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளது....

தங்களுக்கு திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய ஸ்ரீ சுத்தூர் மடத்துக்கு நன்றி கூறிய சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதி மணமக்கள், தங்களது வாழ்வில் இது மிக மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்து சொந்த ஊருக்கு தம்பதியர் சகிதமாக புறப்பட்டு சென்றனர்...

Night
Day