முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை - 6 போலி மருத்துவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். 

குடியாத்தம், பேரணாம்பட்டு, கேவி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் அரசு மருத்துவர் குழுவினர் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையாக மருத்துவம் படிக்காமல், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமலும், சிகிச்சை அளித்து வந்த பெல்லியப்பன், துக்காராமன், ஜோதிப்பிரியா, ரேவதி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துடன் மருந்துகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day