மனைவியை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு காவல் நிலையில் கணவர் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆலடிப்பட்டியை சேர்ந்த பிரித்திகா, மீனாட்சிபுரத்தை சேர்ந்த அன்புராஜ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். திருணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், அன்புராஜ் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day