ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சிட்லப்பாக்கம் ஏரியில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்    

உடல்களை கைப்பற்றி நடத்திய விசாரணையில் சேலையூர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் லோகேஷ் மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்தது. நண்பர்களான இருவரும் சிட்லப்பாக்கம் ஏரியில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்றதில், நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

Night
Day