மீனவர்களின் வலைகளை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து, அராஜகத்தில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்களை கைதுசெய்யக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது விசைப்படகில் அங்குவந்த காரைக்கால் மீனவர்கள், புஷ்பவனம் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலையை சேதப்படுத்தியதுடன், பைபர் படகு மீது விசைப்படகால் மோத முயற்சித்துள்ளனர். இதனையடுத்து புஷ்பவனம் மீனவர்கள் அருகில் மீன்பிடித்துகொண்டிருந்த வெள்ளப்பள்ளம் மீனவர்களிடம் தஞ்சம் அடைந்தனர். கரைதிரும்பிய புஷ்பவனம் மீனவர்கள், தாக்குதல் நடத்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Night
Day