கிரானைட் டஸ்ட் கொண்டு தரமற்ற சாலை... ஒப்பந்ததாரர் மீது பகீர் புகார்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்... கிரானைட் தூசியை கொண்டு சாலை அமைப்பதாக எழுந்துள்ள பகீர் புகார் பற்றி சற்று விரிவாக காணலாம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த கிராமத்தில் உள்ள 2 கிலோ மீட்டர் தூர தார் சாலை முழுவதுமாக பெயர்ந்து வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் புதிய சாலை அமைத்து தர உள்ளாட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்...

இதையடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டது....

அதன்படி புதிய தார் சாலை போடும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் ஒப்பந்ததாரரின் மோசடி வேளையால், ஜல்லி கற்களுக்கு இடையே சுமார் அரை அடி உயரத்துக்கு கிரானைட் டஸ்ட் கொட்டப்பட்டு தரமற்ற சாலை போடப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்...

புதிய சாலைக்காக போடப்பட்ட கிரானைட் தூசால், இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது...

கார் மற்றும் கனரக வாகனங்கள் சென்றால் கிரானைட் தூசுகள் அதிகளவில் பறந்து, அருகில் உள்ள வீடுகளில் தூசு படர்வதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர்...

கிரானைட் டஸ்ட் கொட்டப்பட்டு ஒரு மாத காலமாகியும் சாலை பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என குற்றம் சாட்டும் கிராம மக்கள், தினமும் கிரானைட் தூசி பறந்து மூச்சுத்திணறலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநர் மும்தாஜ் அவர்களிடம் கேட்டபோது, ஜல்லி கற்கள் மீது லேசாக எம்.சாண்ட் மட்டுமே போட வேண்டும் என்றார்...

மொத்தத்தில் புதிய சாலை கேட்ட கிராம மக்கள், ஒப்பந்ததாரரின் மோசடி வேளைகளால் ஓலமிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...

Night
Day