சென்னை வியாசர்பாடியில் மின்சாரப் பேருந்து சாலையில் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வெளியேறும் மாசு அளவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதத்தில் மின்சார பேருந்துகளின் சேவையை விளம்பர திமுக அரசு தொடங்கி வைத்தது. முதல் கட்டமாக 120 பேருந்துகள் சென்னையில் இயங்கி வருகின்றன. மின்சார பேருந்து சேவை தொடங்கிய நாள் முதல் ஆங்காங்கே பேருந்துகள் பழுதாகி நிற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் இருந்து புறப்பட்ட மின்சார பேருந்து முல்லை நகரில் சாலையில் திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். வெகு நேரம் ஆகியும் பேருந்து இயங்காத காரணத்தால், பயணிகள் கீழே இறங்கி பேருந்தை தள்ளிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டது. புதிதாக வாங்கிய மின்சாரப் பேருந்துகள் சில நாட்களிலேயே பழுதாகும் நிலையில், நாட்கள் செல்ல செல்ல அதன் நிலை என்னவாகுமோ? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.